'மாஸ்டர்' நடிகரின் மாஸ் பஞ்ச்: இன்ஸ்டாவில் வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் திரையரங்குகளில் வெளியான 15 நாட்களில் ஓடிடியிலும் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் சின்னச்சின்ன கேரக்டரில் நடித்தவர்கள் கூட பெரிய அளவில் புகழ் பெற்றார்கள் என்பதும் குறிப்பாக பத்து நிமிடங்கள் மட்டும் வரும் குட்டி பவானி கேரக்டரில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாஸ்டர் மகேந்திரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பஞ்ச் வசனத்தை பதிவு செய்து லேட்டஸ்ட் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். ‘நீங்கள் எப்போதும் அசலாக இருங்கள், உங்களை பார்த்து உலகம் நகலெடுக்கட்டும் என்று பதிவு செய்த பஞ்சு வசனம் தற்போது வைரலாகி வருகிறது

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் மகேந்திரன், தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் D 43 படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படமும் அவருக்கு ’மாஸ்டர்’ படத்தைப் போலவே பெரும் புகழை பெற்று கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

மகனின் புகைப்படத்தோடு மாஸ் பெயரையும் அறிவித்த ரமேஷ் திலக்!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ரமேஷ் திலக் என்பது தெரிந்ததே. விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற ரமேஷ் திலக், அதன்பிறகு 'நேரம்

தளபதி 65' நாயகியின் ஹாட் போட்டோஷூட்: வைரல் வீடியோ!

மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபலமானார் என்பது தெரிந்ததே.

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷுடன் நடித்த நடிகை இவர்: யாரென தெரிகிறதா?

ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

மகன், மருமகள் பேரனுடன் நிம்மதியான வாழ்க்கையில் 'முந்தானை முடிச்சு' நடிகை!

கே பாக்யராஜ் நடித்து இயக்கிய 'முந்தானை முடிச்சு' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் தற்போது மகன், மருமகள், பேரனுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்துவதாக சமீபத்தில்

ஜுன்- ரேஷன் பொருட்கள் வழங்குவதில் மாற்றம்… வெளியான புது அறிவிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நாட்களில் ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8-12 மணி வரை இயங்கும்