close
Choose your channels

'மாஸ்டர்' மாளவிகாவின் நீச்சல்குள போஸ்: இணையத்தில் வைரல்!

Saturday, September 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. மாளவிகா பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களும், கமெண்ட்டுகளும் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் அவர் உயரமான கட்டிடம் ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீரில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இரவு வெளிச்சத்தின் பின்னணியில் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. ஏராளமான ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பதும், அதில் ‘மாஸ்டர்’ நடிகர் தீனாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது

’மாஸ்டர்’ படத்திற்கு பின்னர் பாலிவுட் ஆக்சன் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மாளவிகா மோகனன், தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்திலும் நாயகியாக நடிக்கவுள்ளார் என்பதும், இந்த படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.