close
Choose your channels

'எதிரிகளுக்கு எச்சரிக்கை': மாஸ்டர் செகண்ட்லுக்

Wednesday, January 15, 2020 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் செகண்ட்லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அட்டகாசமான போஸ்டர் வெளியாகியுள்ளது.

கருப்பு உடை, கருப்பு கண்ணாடியுடன் விஜய் தோற்றமளிக்க, சுற்றிலும் மாணவர்கள் கருப்பு உடையுடன் நிற்கும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. மேலும் விஜய் இந்த போஸ்டரில் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ’வாயை மூடவும்’ என்ற குறியீட்டை மறைமுகமாக தெரிவித்து இருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் இந்த போஸ்டரில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இந்த போஸ்டர் இருக்கும். எனினும் அடுத்தடுத்து வரும் புரமோஷன்களின் விஜய்சேதுபதியை எதிர்பார்க்கலாம்.

Get Breaking News Alerts From IndiaGlitz