'மாஸ்டர்' இந்தி ரீமேக்: விஜய், விஜய்சேதுபதி கேரக்டர்களில் நடிப்பது யார்?

  • IndiaGlitz, [Saturday,January 16 2021]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் இதன் ரீமேக் உரிமையை பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் Endemol என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் நடித்த ஜேடி என்ற பேராசிரியர் கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் அவரே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே ஒரு சில ஹிந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவரது கேரக்டரை அவரே நடிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த மெகா பட்ஜெட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பாலிவுட் திரையுலகில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படம் ஏற்கனவே பாலிவுட்டில் தயாராகி வரும் நிலையில் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படமும் இந்தியில் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

6 மொழிகளில் தயாராகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: டைட்டில் அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தளபதி விஜய்யுடன் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

'மாஸ்டர்' படம் பார்த்து குஷ்பு கூறியது என்ன தெரியுமா? வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியானது என்பதும், இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியே பல திரையுலக பிரமுகர்கள் பார்த்து தங்களது

தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி… நானும் போட்டுக் கொள்வேன் தமிழக முதல்வர் நம்பிக்கை!!!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கி இருக்கிறது.

மூன்றே நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த 'மாஸ்டர்': மொத்த வசூல் எவ்வளவு?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி மூன்று நாட்களும் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே

ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவியா? வியக்க வைக்கும் புதிய அறிவிப்பு!!!

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான்.