'மாஸ்டர்' படத்தின் அடுத்தகட்ட வியாபாரம் குறித்த தகவல்!

ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் முடிவதற்கு முன்னரே அந்த படத்தின் கிட்டத்தட்ட மொத்த வியாபாரமும் முடிந்துவிடும் மேஜிக் தளபதி விஜய் படத்திற்கு மட்டுமே நடக்கும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது படமாக்கப்பட்டு வரும் 'மாஸ்டர்’ திரைப்படத்தின் வியாபாரம் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லலித் என்பவர் வாங்கி உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அதேபோல் கேரள மாநில, கர்நாடக மாநில, தெலுங்கு மாநில உரிமைகளும் வியாபாரமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமும் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை வியாபாரம் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை யூனிட்டைட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து வெளிநாட்டு உரிமைகளை பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் 90% வியாபாரம் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்னரே முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சூரரை போற்று' கதை குறித்த முக்கிய ரகசியத்தை வெளியிட்ட சுதா கொங்காரா

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தின் உருவாக்கிய சூரரைப்போற்று திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே

தோல்வியிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம்.

நாம் திட்டமிட்டப்படி பல நேரங்களில் எதுவும் சரியாக நடப்பதில்லை. அதனால் தோல்வியைத் தழுவும்  பலரும் தங்களை நொந்து கொள்ளத் தொடங்கி விடுகின்றனர்

எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்.. ஈரானுக்கு தூது விடும் ட்ரம்ப்.

இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2020 - சென்னையில் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி

உண்மையான வாசகன், வாசிப்பதை எப்பொழுதும் முடிப்பதே இல்லை! – ஆஸ்கார் வைல்ட்.

படம் வந்து ஒரு நாள் முடிவடைவதற்குள் இணையத்தில் வெளியான தர்பார்..! ரசிகர்கள் அதிர்ச்சி.

தர்பார் திரைப்படம் வெளியான நிலையில் அப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் இணையத்தில் வெளியாகிவிட்டது.