தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல்! ரசிகர்களிடையே பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,September 12 2020]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அது முதல் கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் இந்த படம் அவ்வப்போது ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் வதந்திகளுக்கு அவ்வப்போது விளக்கம் அளித்த ’மாஸ்டர்’ படக்குழுவினர் இந்த திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் முதலில் வரும் என்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகாது என்றும் தெரிவித்தனர்

இருப்பினும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் வதந்தி, மீண்டும் ஒருமுறை தற்போது வெளிவந்திருக்கிறது. முன்னணி ஓடிடி தளம் ஒன்று ’மாஸ்டர்’ திரைப்படத்தை வாங்கி விட்டதாகவும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது மீண்டும் விளக்கம் அளித்த படக்குழுவினர் ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டன என்பதும் ‘டெனட்’ உள்பட பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் இந்தியாவிலும் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் தீபாவளி அல்லது பொங்கல் தினத்தில் தியேட்டரில்தான் வெளியாகும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்

More News

நாளை நீட் தேர்வு எழுதாமல் விட்டால் மறுவாய்ப்பு இல்லை… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி!!!

இந்தியா முழுவதும் நாளை (செப்டம்பர் 13) நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருந்தது.

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்!!!

கொரோனா நெருக்கடி நிலைமையில் இருந்து தமிழகம் தற்போது மீண்டு வருவதாகத் தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பூமியை நோக்கி 38 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நெருங்கும் ராட்சதகல்!!! பாதிப்பு இருக்குமா???

பூமியை நோக்கி 38,624 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு ராட்சத கல் வந்து கொண்டிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

நீட் என்பது தேர்வுமல்ல; தற்கொலை என்பது தீர்வுமல்ல: வைரமுத்து

நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதன் பரபரப்பு நீங்காத நிலையில்

படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம்: மதுரை மாணவி தற்கொலை குறித்து பிரபல இயக்குனர்!

மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் நீட் தேர்வு பயம் காரணமாக இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்ட தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.