close
Choose your channels

ஆஸ்திரேலியாவில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' செய்த சாதனை!

Saturday, January 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் என்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமின்றி இம்முறை ஹிந்தியிலும் ‘மாஸ்டர்’ படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உலகம் முழுவதும் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சற்று முன்னர் ஆஸ்திரேலியாவில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது

ஆஸ்திரேலியாவில் ‘மாஸ்டர்’ திரைப்படம் 68க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில திரையரங்குகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தமிழ் திரைப்படம் ஒன்று ஆஸ்திரேலியா நாட்டில் இத்தனை அதிகமான திரை அரங்குகளில் வெளியாவது இதுதான் முதல் முறை என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் வரும் திங்கள் முதல் ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.