கோக்க மக்கா அப்டி ஒரு லவ்வு டா: 'மாஸ்டர்' புரமோ வீடியோ!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோ வீடியோ தினந்தோறும் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் அசத்தலான ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை வந்த டீஸர் மற்றும் புரோமோ வீடியோ அனைத்திலும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் முதல் முறையாக ஆக்சனுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்று இருப்பது விஜய் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாகத்தான் இருக்கும்.

இந்த புரமோ வீடியோவில் ’அன்றைக்கு காலேஜுக்கு புதுசா ஒரு டீச்சர் வந்தாங்க, கோக்க மக்கா அப்டி ஒரு லவ்வு டா’என்று விஜய் வசனம் பேச மாளவிகாவின் ரொமான்ஸ் பார்வையையும், ’அந்த கண்ணை பாத்தாக்க’ என்ற பாடலின் பின்னணியும் பார்க்கும்போது இன்னொரு ’காதலுக்கு மரியாதை’ படம் பார்க்கின்றோமோ என்ற உணர்வு ஏற்படுவதாக விஜய் ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.