ஓடிடியில் 'மாஸ்டர்' ரிலீஸா? தயாரிப்பு தரப்பின் அதிகாரபூர்வ தகவல்

  • IndiaGlitz, [Wednesday,August 05 2020]

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும், திரை அரங்குகள் திறந்த உடன் தான் பிரமாண்டமாக வெளியாகும் என்றும் படக்குழுவினர் ஏற்கனவே உறுதி செய்திருந்தனர்,.

ஆனால் சமீபத்தில் அமேசான் பிரைம் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் ’மாஸ்டர்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தற்போது விளக்கம் அளித்துள்ளது

அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் விளம்பரத்தில் உள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கொரிய மொழி திரைப்படம் என்றும் தளபதியின் ’மாஸ்டர்’ திரைப்படம் அல்ல என்றும் தளபதியின் ’மாஸ்டர்’ படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே விஜய்யின் ’மாஸ்டர்’ திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ, அப்போதுதான் வெளியாகும் என்பது தற்போது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது

More News

லெபனான் தலைநகரில் பயங்கர வெடிவிபத்து: 100 அடி தூரத்திற்கு கட்டிடங்கள் சேதம்

லெபனானின் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் நேற்று நிகழ்ந்த ஒரு பயங்கர வெடிப்பு விபத்து, அந்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வெடி விபத்து குறித்த சேதங்கள்

தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர்: கலெக்டர்களுடன் ஆலோசனை செய்கிறார்!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையை தமிழக சுகாதாரத் துறையினர் தீவிரமாக எடுத்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் தற்போது

அக்காவுக்கு பாலியல் தொல்லை: ஆணுறுப்பை சிதைத்த மச்சான்; திடுக்கிடும் தகவல்

சமீபத்தில் திருமங்கலம் பகுதியில் கணவரை அவரது மனைவியே கொலை செய்த சம்பவம் குறித்த செய்தியைப் பார்த்தோம்

கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: உயிர் போகும் நிலையில் வீடியோவை வெளியிட்ட கணவர்!

கணவரின் நண்பருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் கணவரையே கொலை செய்ய ஆள் வைத்து அடித்து சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கட்டி முடிக்கப்பட்டவுடன் அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும்? வைரலாகும் புகைப்படங்கள்

பல ஆண்டுகளாக ராமர் கோயில் பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விடிவு காலம் ஏற்பட்டது