பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் தொடரும் குரூப்பிஸம்.. மாறாத பகை..!

  • IndiaGlitz, [Friday,January 19 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கும் போது பகை உணர்வாக இருந்தாலும் வெளியே வந்த பிறகு நட்புறவு பாராட்டி வருவதை தான் கடந்த ஆறு சீசன்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் ஏழாவது சீசனில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது குரூப்பிஸமாக இரண்டு குரூப்புகளாக இருந்த நிலையில் வெளியே வந்த பின்னரும் அந்த குரூப்பிஸம் தொடர்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு குழுக்களாக விளையாடினர் என்பதும் கமல்ஹாசனே அவர்களை ‘ஏ’ டீம் மற்றும் ‘பி’ டீம் என அதற்கு பெயர் வைத்தார் என்பது தெரிந்ததே. மாயா தலைமையிலான குரூப்பில் ஜோவிகா, பூரணிமா, விசித்ரா, நிக்சன், கானா பாலா, அக்ஷயா ஆகியோர்களும் தினேஷ் குரூப்பில் விஷ்ணு, பிராவோ, மணிச்சந்திரா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இருந்தனர். அர்ச்சனா தினேஷ் குரூப்புக்கு ஆதரவாக இருந்தாலும் அவர் எல்லோரிடமும் நட்புடனும் சண்டை போட்டும் இருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் ஏற்கனவே இருந்த குரூப்பிஸம் தொடர்ந்து வருவதாக தெரிகிறது. வனிதாவின் வீட்டில் மாயா, கானா பாலா, ஜோவிகா உள்ளிட்டோர் சந்தித்த புகைப்படங்களும் அதே போல் தினேஷ் குரூப்பில் உள்ளவர்கள் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் இன்னும் குரூப்பிஸம் தொடர்கிறதா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும் மாயா தோல்வி அடைந்ததை கொண்டாடும் வகையில் விஷ்ணு வெடி வெடித்ததும், அர்ச்சனா பணம் செலவழித்து தான் டைட்டில் பட்டதை வாங்கினார் என மாயா சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவதும் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அன்னபூரணி' சர்ச்சை.. 'ஜெய் ஸ்ரீராம்' என தொடங்கி நயன் தாரா வெளியிட்ட அறிக்கை..!

 நடிகை நயன்தாரா நடித்த 'அன்னபூரணி' என்ற திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் அதில் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இருந்ததை அடுத்து

திருடுவதற்கு ஹார்டுவொர்க் எவ்வளவு முக்கியமோ, ஸ்மார்ட்வொர்க்கும் முக்கியம்: 'தூக்குதுரை' டிரைலர்..!

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த 'தூக்குதுரை' என்ற படத்தின்  டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

2024ல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல்..!

பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது!

கார்த்தி - பிரேம்குமார் படத்தின் டைட்டில் இதுவா? செமையா இருக்கே..!

நடிகர் கார்த்தி நடித்த 'ஜப்பான்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது அவர் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில்

தனுஷின் அடுத்த படம்.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!

தனுஷ் நடித்து முடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவரது அடுத்த படம் குறித்து மாஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது