விஜய்யின் சர்கார்: மாயாஜாலில் 80 காட்சிகள், 96 காட்சிகளுக்கும் வாய்ப்பு

  • IndiaGlitz, [Saturday,November 03 2018]

தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் வெளியாக இன்னும் இரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது இந்த படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒருசில நொடிகளில் முதல் நாள் காட்சிகளின் முன்பதிவுகள் முடிந்துவிட்டதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் புதிய சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நிலையில் சென்னை அருகே உள்ள மாயாஜால் திரையரங்க வளாகத்தில் உள்ள 16 திரையரங்கிலும் 'சர்கார்' திரைப்படம் தான் திரையிடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு திரையரங்கிலும் 5 காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே முதல் நாள் 'சர்கார்' திரைப்படம் 80 காட்சிகள் திரையிடப்படவுள்ளன.

இப்போதைக்கு முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஒருவேளை அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்தால் 6 காட்சிகள் திரையிட வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு நடந்தால் முதல் நாளில் 96 காட்சிகளுக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.