close
Choose your channels

ஆபாசப்படம் காண்பித்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.....! பாஜக நிர்வாகி அதிரடி கைது....!

Monday, July 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆபாசப்படத்தை காண்பித்து சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வு செய்த, பாஜக நிர்வாகி மகாலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் பக்கத்தில் இருக்கும் கோழிகுத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான், 60 வயது நிரம்பிய பாஜக நிர்வாகி மகாலிங்கம். அந்தப்பகுதியில் பாஜக நிர்வாகியாகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவன் 6 சிறுமிகளிடம் ஆபாச படங்களை காண்பித்து, பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். சிறுமிகளை கட்டிப்போட்டு, பலாத்காரம் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளான். இதையடுத்து பயந்துபோன சிறுமிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கொடூரன் மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, ஜெயிலில் அடைந்துள்ளார்கள்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.