சாமியார் போர்வையில் பித்தலாட்டக்காரர்கள்: நடிகர் மயில்சாமி பேட்டி

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

சாமியார் என்ற போர்வையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா நாட்டை விட்டே வெளியேறி தலைமறைவாகியுள்ள நிலையில் தற்போது அதே குற்றச்சாட்டில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நடிகர் மயில்சாமி கூறியதாவது.

’ஆசிரமம், ஆடம்பரமான சாமியார்கள் யாரும் சாமியார்கள் கிடையாது. இதில் முக்கால்வாசி பேர் பித்தலாட்டக்காரர்கள் தான். சாமியாராக இருப்பவர்கள் ஆசிரமம் அமைத்து அதில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு குழந்தைகளையும் மற்றவர்களையும் ஏமாற்றி வாழ்கிறார்கள். இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.

தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது. மதத்தின் அடிப்படையில் ஜாதி அடிப்படையில் சில பேர்களை விமர்சனம் செய்து கொண்டு முன்னேறுபவர்கள் அனைவரும் ஊரை ஏமாற்றும் நபர்கள் தான்’ என்று நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.
 

More News

விஷால் மீது சரமாறியாக எறியப்படும் கண்ணாடி பாட்டில்கள்: அதிர்ச்சி வீடியோ

விஷால் நடித்து வரும் 31வது படத்தை து.பா சரவணன் என்ற இயக்குனர் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டது.

அசிங்கமாக பேசியே ஆடி கார் முதல் அடுக்குமாடி வரை...! "ஆபாச" மதனின் சொத்துமதிப்பு....!

ஆபாசமகாவும், அதிகாரமாகவும் பேசிய பப்ஜி மதன் தலைமறைவானதை தொடர்ந்து, அவரது மனைவி கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு....! நிம்மதி பெருமூச்சில் மக்கள்...!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட துவங்கியுள்ளனர்.

'இந்தியன் 2' வழக்கு: லைகாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்!

'இந்தியன் 2' தயாரிப்பு நிறுவனம் லைகாவின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனாவுக்கு பலியான தமிழ் திரைப்பட நாயகன்: அதிர்ச்சியில் திரையுலகம்

கடந்த சில வாரங்களாகவே தமிழ் திரையுலகை சேர்ந்த சிலர் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பாக இயக்குநர் கேவி ஆனந்த், இயக்குனர் தாமிரா உள்ளிட்ட பலரும் உயிரிழந்து