'நண்பன்' பட பாணியில் வாட்ஸ் ஆப் உதவியால் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவர்

  • IndiaGlitz, [Tuesday,April 11 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'நண்பன்' படத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மருத்துவ மாணவியான இலியானா கூறும் டிப்ஸ் மூலம் விஜய் பிரசவம் பார்த்த காட்சி அனைவரையும் நெகிழ செய்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் நாக்பூர் அருகே ஓடும் ரயிலில் பிரசவ வலி ஏற்பட்ட ஒரு பெண்ணுக்கு மருத்துவ மாணவர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் சீனியர் மருத்துவரின் உதவி பெற்று பிரசவம் பார்த்தார்.

சமீபத்தில் நாக்பூர் அருகே ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அறிந்த உறவினர்கள் உடனே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

கர்ப்பிணி பெண்ணின் நிலைமையை புரிந்து கொண்ட டிடிஆர், ரயிலில் மருத்துவர் யாராவது பயணம் செய்கின்றார்களா? என்று தேடினார். ஆனால் மருத்துவர் யாரும் இல்லாத நிலையில் விபின் காட்ஸி என்ற நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர் ஒருவர் பிரசவம் பார்க்க முன்வந்தார்.

உடனடியாக ஆண்கள் அனைவரும் அந்த ரயில் பெட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அங்குள்ள பெண்களின் உதவியோடு விபின்காட்ஸி பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து விபின்காட்ஸி கூறியபோது, 'குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதிகள் வெளியே வர சிரமப்பட்டது. உடனே நான் அதனை போட்டோ எடுத்து மருத்துவர்கள் உள்ள வாட்ஸ்அப் குருப்பில் பதிவு செய்தேன். அதனைப் பார்த்து ஒரு சீனியர் மருத்துவர் எனக்கு அறிவுரை கூறினார். அவருடைய அறிவுரையின் படி வெற்றிகரமாக பிரசவம் செய்தேன்' என்று கூறியுள்ளார். இக்கட்டான சமயத்தில் விபின் செய்த இந்த உதவிக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

சென்னை அண்ணா சாலையில் சற்றுமுன் மீண்டும் விரிசல். போக்குவரத்து பாதிப்பு

சென்னை அண்ணா சாலையில் கடந்த ஞாயிறு அன்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் மற்றும் பேருந்து சிக்கி, அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தபித்திருந்த நிலையில் சில நிமிடங்களுக்கு மீண்டும் கிட்டத்தட்ட அதே பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது...

ரிலீசுக்கு முன்பே அமீர்கான் பட சாதனையை உடைத்த 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டுமே 6500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய திரைப்படமும், இத்தனை தியேட்டர்களில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

மீண்டும் அஜித்துக்கு வில்லனாக மாறிய 'வேதாளம்' புகழ் கபீர்சிங்

கோலிவுட் ரசிகர்களுக்கு கபீர்சிங் என்ற நடிகர் ஒருவர் இருக்கின்றார் என்பதே தெரியாமல் இருந்த நிலையில் அஜித்தின் 'வேதாளம்' என்ற ஒரே ஒரு படத்தில் நடித்ததன் மூலம் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்ட நடிகராக மாறிவிட்டார்...

டெல்லியில் மத்திய அமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தனது மனதுக்கு தோன்றிய, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்...

சசிகலாவை அடுத்து சிறைக்கு செல்லும் தமிழக தலைவர் இவர்தான். சுப்பிரமணியன் சுவாமி

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் சிறைக்கு செல்ல காரணமான வழக்கை பதிவு செய்தவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.