இயந்திரம் மூலம் மனிதக்கழிவு அகற்றுதல்: தமிழகத்தில் அறிமுகம் செய்த உதயநிதி!

  • IndiaGlitz, [Monday,June 21 2021]

கடந்த பல ஆண்டுகளாக மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு பதிலாக இயந்திரங்கள் மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் முறையை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் முதல்முறையாக மனித கழிவுகளை இயந்திரம் மூலம் அகற்றும் முறையை சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செயல்முறைபடுத்தியுள்ளார்.

மனித கழிவுகளை இயந்திரத்தை கொண்டும் அகற்றும் முறை முதல்முறையாக சேப்பாக்கம் தொகுதியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம்’என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த வாக்குறுதி சேப்பாக்கம் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இயந்திர முறையில் மனிதக்கழிவுகளை அகற்றும் முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரியவே கூடாது… கைகளுக்கு சிறை விலங்கிட்டு காதலித்த ஜோடி… 123 நாட்களில் நடந்த சோகம்!

காதல் எனும் உணர்வுக்கு உலகம் முழுவதும் பெரிய மதிப்பு கொடுக்கப் படுகிறது. இப்படியான சரித்திரத்தில் நாமும் இடம்பிடித்து விட வேண்டும் என நினைத்த

இவர்கள் ஒரு பிரபல நடிகையின் பெற்றோர்கள்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

நேற்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதை அடுத்து தந்தையர் குறித்து தங்களது மலரும் நினைவுகளை தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்

கிராமத்துக் கெட்டப்பில் தரிசனம் தந்த “குக் வித் கோமாளி” பிரபலம்… குவியும் லைக்ஸ்!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான “குக் வித் கோமாளி” எனும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

உலக யோகா தினத்தில் ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் உலக யோகா தினம் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடி யோகாவின் பெருமை குறித்து நாட்டு

மல்லாக்க கிடந்த காரை உற்சாகத்தோடு மீட்ட பொதுமக்கள்… இணையத்தை கலக்கிய வீடியோ!

மும்பை சாலையில் குப்புற கவிழ்ந்த கார் ஒன்றை 10க்கும் மேற்பட்ட கடைவாசிகள் சேர்ந்து திருப்பிய வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில்