கடும் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: மருத்துவர் குழு பரிந்துரை

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இரண்டு வார ஊரடங்கு நாளை மறுநாள் உடன் முடிவுக்கு வருவதை அடுத்து இந்த ஊரடங்கை நீடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்

இந்த ஆலோசனையின் போது அவர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சம் பெறும் என மருத்துவ நிபுணர்கள் கூறி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென்றும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தற்போது அளிக்கப்பட்டிருக்கும் தளர்வுகள் காரணமாக ஊரடங்கின் நோக்கமே நிறைவேறவில்லை என்றும் அதனால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து தற்போது உள்ள ஒருசில தளர்வுகள் நீக்கப்பட்டு மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் இரண்டு வாரங்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

தனக்குத்தானே 144 விதித்துக் கொண்ட கிராமம்! குவியும் பாராட்டு!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த கிராமம் ஒன்று தனக்குத்தானே 144 ஊரடங்கு விதித்துக் கொண்டு இருப்பது கடும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மோகன்லாலுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் நாயகி!

அஜித் நடித்த 'வரலாறு' என்ற திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவர் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அவருக்கு தனது பிறந்தநாள்

போற போக்குல எடுக்கும் பட அல்ல அந்த படம்: நெட்டிசன் கேள்விக்கு சேரன் பதில்!

கடந்த 1997ஆம் ஆண்டு 'பாரதி கண்ணம்மா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். அதன் பின்னர் இவர் 'ஆட்டோகிராஃப்' உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார்

கொரோனாதேவி புகைப்படத்தை வனிதாவுக்கு அனுப்பிய நெட்டிசன்கள்: அவருடைய ரியாக்சன் என்ன தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்

மாஸ் நடிகருக்குக் சகோதரியாக நடிக்கின்றாரா ஜோதிகா?

மாஸ் நடிகர் ஒருவருக்கு சகோதரியாக நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது