close
Choose your channels

பிரபல நடிகையின் குட்டிப்பாப்பா பிறந்த நாளுக்கு மகளுடன் சென்ற நடிகை மீனா!

Wednesday, January 27, 2021 • தமிழ் Comments

கேஆர் விஜயாவுக்குப் பிறகு ’புன்னகை அரசி’ என்ற பட்டத்தை பெற்ற நடிகை சினேகா மகளான குட்டிப்பாப்பாவுக்கு முதல் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து நடிகை மீனா தனது மகளுடன் சென்று சினேகாவின் குட்டி பாப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்

நேற்று நடிகை சினேகா தனது மகள் ஆத்யந்தா முதல் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார். சினேகாவின் குடும்பத்தினரும் மற்றும் திரையுலகினர் சிலரும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக இயக்குனர் ஹரியின் மனைவி பிரீதா இந்த பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த விழாவில் நடிகை மீனா தனது மகள் நைனிகா உடன் கலந்து கொண்டு குட்டிப் பாப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மீனாவின் மகள் நைனிகா விஜய் நடித்த ’தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz