close
Choose your channels

ரஜினியின் 'தலைவர் 168': மீனாவின் புதிய புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்

Tuesday, January 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த், மீனா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மீனாவின் புகைப்படம் இணையதளத்தில் வலம் வந்துகொண்டிருந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

பக்கா கிராமத்து பெண்ணாக அந்த புகைப்படத்தில் மீனா தோன்றியதால் ’தலைவர் 168’ திரைப்படம் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்றும் அதில் மீனா கிராமத்து பெண் வேடத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள ‘தர்பார் 168’ படத்தின் புதிய புகைப்படத்தில் நவநாகரீக மாடர்ன் உடையில் மீனா உள்ளார். இதனால் மீனாவுக்கு கிராமத்து பெண் வேடமா? அல்லது நகரத்து பெண் வேடமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. நகரில் இருந்து கிராமத்திற்கு வந்து செட்டிலான கேரக்டராகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos