ரஜினி கிண்டல் செய்ததை 36 வருடங்களுக்கு பின் தெரிவித்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை பற்றி தன்னுடைய அம்மாவிடம் கிண்டல் செய்ததை 36 வருடங்கள் கழித்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது நண்பர் கே.நடராஜ் இயக்கிய திரைப்படம் ’அன்புள்ள ரஜினிகாந்த். கடந்த 1984ஆம் வெளியான இந்த படத்தில் அம்பிகா முக்கிய வேடத்திலும், மீனா குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் ரஜினி, மீனா சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் சிறப்பாக உருவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போது இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட மலரும் நினைவுகளை நடிகை மீனா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அம்பிகா மீது பால் ஊற்றும் காட்சி, ரஜினிகாந்த் சாக்லேட் கொடுக்கும்போது அதை கடித்து துப்பும் காட்சி ஆகியவைகளை குறிப்பிட்ட நடிகை மீனா, தன்னுடைய குண்டான உருவத்தை தனது அம்மாவிடம் ’நீங்கள் எந்த கடையில் அரிசி வாங்குகிறீர்கள் என்று ரஜினிகாந்த் கேலி செய்ததையும் குறிபிட்டுள்ளார். ரஜினி தன்னை கிண்டல் செய்த ரகசியத்தை இதுநாள் வரை யாரிடமும் சொல்லவில்லை என்றும் தற்போது தான் இதனை சொல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ரஜினி தன்னை கிண்டல் செய்ததை வருடங்கள் 36 வருடங்கள் கழித்து நடிகை மீனா கூறியிருக்கும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அதன்பின்னர் ‘எஜமான்’ படத்தில் முதன்முதலாக அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் அதன் பின்னர் ’முத்து’, ‘வீரா’ உள்ளிட்ட படங்களிலும் அவர் ரஜினியுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் ’அண்ணாத்த’ படத்தில் ரஜினியுடன் மீனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கோயம்பேடு தொடர்பால் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா: எங்கே தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்,

கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் புதிய குழப்பம்!!! இது தடுப்பூசி ஆய்வில் தாமதத்தை ஏற்படுத்துமா???

கொரோனா நாவல் SARS-Covid-2 வைரஸ் பரவும் வேகமும் அதன் தன்மையும் நாளுக்கு நாள் மாறுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

தனிமனித இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' டான்ஸ்: அனிருத் ஆச்சரியம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

சுப்ரீம் கோர்ட் போனாலும் விடமாட்டேன்: கமல்ஹாசன்

தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் சென்னை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் சுமார் 300 கோடி டாஸ்மாக் சரக்குகள் விற்பனை ஆகின என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்றும் கொரோனாவுக்கு 500க்கும் மேற்பட்டவரகள் பாதிப்படைந்ததாக