'பாபநாசம் 2' படத்தில் நடிக்கின்றேனா? மீனா அளித்த பதில்!

  • IndiaGlitz, [Saturday,July 03 2021]

மோகன்லால், மீனா நடித்த ’த்ரிஷ்யம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ’த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகம் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் ’பாபநாசம் 2’ படமும் விரைவில் உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் கவுதமி நடிக்க வாய்ப்பில்லை என்பதால் அவருக்கு பதிலாக மீனாவே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த மீனா, ‘பாபநாசம் 2’ படத்தில் நடிக்கிறீர்களா என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ’கமல்ஹாசன் அவர்களிடம் கேளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக மற்றொரு கேள்விக்கு அவர் பதில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய ஃபேவரைட் ஹீரோ தளபதி விஜய் என்று கூறிய மீனா, தனக்கு சிவாஜி கணேசன், நெடுமுடி வேணு, நாகேஸ்வரராவ் ஆகியோர்களின் நடிப்பு பிடிக்கும் என்றார். தன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’நீங்கள் கொஞ்சம் லேட்’ என கூறி தனது திருமண புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ரசிகர்களின் கேள்விக்கு மீனாவின் இந்த சுவராசியமான பதில்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
 

More News

முன்னாள் முதல்வர் பேரனுடன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் முறிவு: தமிழ் நடிகை அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் பேரனுடன் நடந்த நிச்சயதார்த்தம் முறிந்து விட்டதாக தமிழ் நடிகை ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வனிதாவின் அதிரடி முடிவு குறித்து ஒரே வார்த்தையில் கமெண்ட் அளித்த ரம்யா கிருஷ்ணன்!

நடிகை வனிதா விஜயகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் விஜய் டிவியிலிருந்து தான் வெளியேறுவதாகவும், பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும்

'தலைவி 2' எடுத்தால் ரஜினி சொன்ன விஷயங்கள் இணைக்கப்படும்: மதன் கார்க்கி 

'தலைவி' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் கண்டிப்பாக ரஜினி கூறிய சுவாரசியமான விஷயங்கள் அதில் சேர்க்கப்படும் என ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த 'தலைவி' படத்தின் வசனகர்த்தா மதன் கார்க்கி

ஆன்லைன் வகுப்பில் மாணவர் செய்த சேட்டை… லைவ்வாக செக்ஸில் ஈடுபட்டதால் அதிர்ச்சி!

கொரோனா காரணமாகக் கல்வி முறையே மாற்றம் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் அனைத்து பள்ளி, கல்லூரி வகுப்புகளும் ஆன்லைனில்தான் நடைபெற்று வருகின்றன

ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க்கோடு வலம்வரும் மனிதர்… வைரல் புகைப்படம்!

உத்திரப்பிரதேசம் கான்பூரில் எப்போதும் கிலோ கணக்கில் தங்கத்தை அணிந்து வலம்வரும் நபர் ஒருவர் தற்போது ரூ.5 லட்சம் மதிப்பிலான பிரத்யேக  மாஸ்க்கை உருவாக்கி அணிந்து வருகிறார்.