ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் பெயர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,June 22 2017]

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக பீகார் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் அவர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இவருக்கு அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார் அவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இவரை ஆதரிக்கும் என தெரிகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதாலும், அதிமுக, தெலுங்கு தேசம், உள்பட முக்கிய கட்சிகள் ஆதரவு கொடுத்திருப்பதாலும் பாஜக ஆதரவு வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மீராகுமாரை வெற்றி பெற செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பும்ரா வீசிய நோபால் இதுக்காவது பயன்படுதே!

சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியை இப்பொழுது நினைத்தாலும் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் அளவில்லாத ஆத்திரம் வரும். குறிப்பாக பும்ரா வீசிய நோபாலில் தப்பிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜமான், 111 ரன்கள் அடித்ததும் இந்தியாவின் தோல்விக்கு இதுவும் ஒரு மிகப்பெரிய காரணம் என்பதையும் இன்னும் சில வருடங்&

ரஜினியின் '2.0' படத்துடன் கனெக்சன் ஆன தனுஷின் 'விஐபி 2'

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஷாருக்கானுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்!

பாலிவுட் பாட்ஷா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஷாருக்கானுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு திரையுலகினரும் ஆசைப்படுவதுண்டு.

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இருந்த 400 கிலோ தங்கம் எங்கே? புதிய தகவல்

கடந்த மாதம் சென்னை தி.நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டு அந்த கட்டிடத்தின் 7 மாடிகளிலும் இருந்த ஜவுளிகள் சாம்பலாகின...

சிவப்பு சிக்னலை தாண்டினால் தானாக நிற்கும் ரயில்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ரயில் விபத்துக்கள் மூலம் மட்டுமே சுமார் 27ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தேசிய குற்றப்பதிவுக் காப்பகத்தின் புள்ளிவிபரம் கூறுகின்றது. எனவே ரயில் விபத்துக்களை குறைத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே துறை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றது...