அதிபர் ஜோ பிடன் உரைக்குப் பின்னால் ஜொலித்த இந்தியர்? யார் இந்த வினய் ரெட்டி?

  • IndiaGlitz, [Saturday,January 23 2021]

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜோ பிடன், பதவி ஏற்றுக்கொண்ட உடன் தனது உரையை நாட்டு மக்களுக்கு நிகழ்த்தினார். இந்த உரை உலகம் முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இதனால் இந்த உரையை தயார் செய்தது யார்? என்ற எதிர்ப்பார்ப்பும் உலக ஊடகங்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. காரணம் முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரைக்கு பின்னால் ஒரு ஜாம்பவான் இருப்பதாக ஊடகங்கள் நம்புகின்றன.

அந்த வகையில் அமெரிக்கா வரலாற்றிலேயே முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் வெள்ளை மாளிகையின் பேச்சு எழுத்து இயக்குநராக பதவி ஏற்று இருக்கிறார். அவர்தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினய் ரெட்டி. இவருடைய தாத்தாவுக்கு பூர்வீகம் தெலுங்கானாவின் ஒரு குட்டி கிராமம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிபராக ஜோபிடன் பதவி ஏற்றுக்கொண்டவுடன் “ஒருங்கிணைந்த அமெரிக்கா“ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த எதிர்காலமும் இருந்ததோடு ஒருங்கிணைந்த நாட்டு மக்களின் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தும் வகையில் இந்த உரை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் வினய் ரெட்டி கவனிக்கப்படும் மனிதராக மாறி இருக்கிறார். நியூயார்க்கில் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்துவரும் இவர் முன்னதாக 2 ஆவது முறையாக ஜோ பிடன் துணை அதிபர் பதவி வகித்தபோது அவருக்கு பேச்சு எழுத்தராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல முன்னாள் அதிபர் ஒபாமா பதவியில் இருந்தபோது அவருடைய நிர்வாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் சுகாதார மனித சேவைகள் அமைப்புக்கான துறையில் எழுத்தராக இவர் பணியாற்றி இருக்கிறார். மேலும் அதற்கு முன்பே தேசிய தகவல் தொடர்பு துணை நிறுவனத்தில் இவர் பேச்சு எழுத்தராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல ஒஹியோ செனட் சபையில் பங்கு வகித்த ஷெரோட் பிரவுனின் பேச்சு எழுத்தாளராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.

இவருடைய தாத்தா திருப்பதி தெலுங்கானாவின் போத்தி ரெடிபெட்டா எனும் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து இருக்கிறார். இந்த அரசியல் கண்ணோட்டம் பேரன் வினய் ரெட்டிக்கு வந்துவிட்டதோ என்னவோ இன்றைக்கு உலகின் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் பேச்சு எழுத்தராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். வினய் ரெட்டியின் அப்பா நாராயணா கடந்த 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்துள்ளார். அங்கு அவர் இருதய நோய் நிபுணராக பணியாற்றி இருக்கிறார்.

நாராயணா அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் வசித்தபோது வினய் ரெட்டி டேட்டனில் பிறந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் என்னதான் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தாலும் இன்றைக்கும் நாராயணா மற்றும் அவருடைய மனைவி விஜயா ஆகிய இருவரும் தெலுங்கானாவிற்கு வந்து கொண்டுதான் இருக்கின்றனர். காரணம் இன்றும் இவர்களுடைய பூர்வீக சொத்து தெலுங்கானாவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கானவை சேர்ந்த திருப்பதியின் பேரன் வினய் ரெட்டி அமெரிக்க வெள்ளை மாளிகையில் பேச்சு எழுத்து பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் அமெரிக்க அதிபரின் அனைத்து பேச்சு மற்றும் எழுத்துகளை ஆய்வு செய்து தயார் செய்து கொடுக்கும் குழுவிற்கு தலைவராக பணியாற்றுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'இயேசு அழைக்கிறார்' அமைப்பில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத முதலீடுகள் இத்தனை கோடியா?

கடந்த மூன்று நாட்களாக 'இயேசு அழைக்கிறார்' என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது தெரிந்ததே.

'வலிமை' அப்டேட்டை யாரிடம் அஜித் ரசிகர்கள் கேட்டார்கள் தெரியுமா? கொஞ்சம் ஓவராத்தான் போறாங்களோ!

தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

காதலுக்கு வயதில்லை: 52 வயது அஜித் பட வில்லனை காதலிக்கும் 'தனி ஒருவன்' பட நடிகை!

காதல் வயது வித்தியாசம் பார்த்து வருவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 52 வயது அஜித் பட வில்லன் நடிகர் ஒருவரை நடிகை ஒருவர் காதலிக்கும் தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

டிஸ்சார்ஜ் ஆன கையோடு டீசரை வெளியிட்ட கமல்ஹாசன்!

உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஞாயிறன்று முடித்ததோடு தனது காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆனார்

சேலம் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு! 4 தினங்களில் இருவருக்கு!

சேலம் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே, ஒழுங்குமுறை பணியில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது.