தனுஷ்-கவுதம் மேனன் படத்தின் நாயகி
'கொடி' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த தனுஷ் இன்று முதல் தொடங்கியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை அருகில் உள்ள இஞ்சினியரிங் கல்லூரி ஒன்றில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனரின் அடுத்த படமான 'ஒரு பக்க கதை' படத்தின் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று படப்பிடிப்பு ஆரம்பமாகுவது குறித்து தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில், 'மற்றொரு படம் மற்றொரு வேடம், புதிய படமான 'எனை நோக்கி பாயும் தோட்டாவின் படப்பிடிப்பு இன்று முதல் உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் தொடங்குகிறது' என்று தெரிவித்துள்ளார்.