இங்கிலாந்து இளவரசரின் குழந்தைக்கு ஞானத்தாய் ஆகும் நம்மூர் நடிகை?

  • IndiaGlitz, [Saturday,January 19 2019]

இங்கிலாந்து இளவரசர் ஹாரி கடந்த ஆண்டு மே மாதம் தனது காதலி மேஹனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மேஹன் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு வரும் மே மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கிறிஸ்துவ முறைப்படி ஒரு குழந்தைக்கு ஞானஸ்தானம் செய்ய, பெற்றோர்களுக்கு நெருக்கமான ஒரு ஜோடி தேர்வு செய்யப்படுவதுண்டு. அந்த வகையில் ஹாரி-மேஹன் தம்பதிக்கு பிறக்கும் குழந்தையின் ஞானத்தாயாக நம்மூர் நடிகை பிரியங்கா சோப்ராவும், ஞானத்தந்தையாக அவருடைய கணவர் நிக் ஜோன்ஸ் அவர்களையும் நியமானம் செய்ய பரிசீலனை நடந்து வருவதாக தெரிகிறது.

மேஹனின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா என்பதும், மேஹனின் திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட மிகச்சிலரில் பிரியங்காவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரியாங்கா சோப்ரா, விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இன்று பாலிவுட், ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார் என்பது தெரிந்ததே!

 

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது.

ரூ.125 கோடி வசூல் உண்மையா? இயக்குனர் சிவாவின் மெச்சூரிட்டியான விளக்கம்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி வசூல் செய்ததாக அந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

96 தெலுங்கு ரீமேக்: ராம், ஜானு கேரக்டரில் நடிப்பது யார்?

கடந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று '96'. படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களது பள்ளி காலத்து மலரும் நினைவுகளுக்கு அழைத்து சென்றதே

நயன்தாராவின் சகோதரி கேரக்டரில் திருநங்கை நடிகை

நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஐரா' என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதும் தெரிந்ததே

'இந்தியன் 2' படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் டுவீட்

கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இன்று முதல் சில நாட்கள் சென்னையிலும்,