என்ன ஒரு அருமையான போட்டோஷாப்? கண்டனம் தெரிவித்த மறைந்த நடிகரின் மனைவி!
ஆக்சன் கிங் அர்ஜூன் சகோதரர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென மரணம் அடைந்தது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. 39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் அர்ஜூன் வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் அதிர்ச்சியில் இருந்து மீள சில வாரங்கள் ஆனது.
இந்த நிலையில் சிரஞ்சீவி மரணம் அடையும்போது கர்ப்பமாக இருந்த மேக்னாராஜ்க்கு இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளங்களில் போட்டோஷாப் செய்த பொய்யான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மேக்னாராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’எனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக போடோஷாப் மூலம் வதந்திகளை ஒருசிலர் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம். என்னை பற்றி, எனது குடும்பத்தை பற்றி நான் சொல்லும் தகவல் மட்டுமே உண்மையாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை பற்றி பொய்யான தகவல் பரப்பி வரும் சமூக வலைத்தள பயனாளிகளுக்கு கண்டனம் தெரிவித்த மேக்னாராஜ், என்ன ஒரு அருமையான போட்டோஷாப் வொர்க், இவர்களிடம் போட்டோஷாப் பாடங்களை கற்று கொள்ளலாம் என்றும், அந்த அளவுக்கு தொழில் திறமை இவர்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.