close
Choose your channels

தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த இளம் நடிகை

Saturday, June 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து முடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் பிரச்சனைகள் முடிவடைந்து அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சினேகா நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க மெஹ்ரின் பிர்ஜதா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை இந்த படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. நடிகை மெஹ்ரின் இதற்கு முன்னர் சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' மற்றும் ஆனந்த் ஷங்கர் இயக்கிய 'நோட்டா' ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 34வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் வில்லனாக நடிகர் நவீன் சந்திரா என்பவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.