close
Choose your channels

மேகா ஆகாஷ் நடித்த முதல் பாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

Tuesday, January 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா', சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருபவர் நடிகை மேகா ஆகாஷ். நாளை மறுநாள் வெளிவரவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்திலும் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மேகா ஆகாஷ் முதல்முறையாக ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு 'சாட்டிலைட் சங்கர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இர்பான் கமல் இயக்கி வரும் இந்த படத்தின் நாயகனாக சூரஜ் பஞ்சோலி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாகத்தான் மேகா ஆகாஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.