close
Choose your channels

விஜய்சேதுபதி படத்தில் இருந்து வெளியேறிய அமலாபால்! உள்ளே வந்த சிம்பு பட நடிகை!

Tuesday, June 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் 33வது படத்தை வெங்கடகிருஷ்ண யோக்நாத் இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கவிருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் படக்குழுவினர் கேட்ட கால்ஷீட் தேதியை அமலாபால் தர முடியாத சூழ்நிலையில் இருப்பதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே அமலாபாலுக்கு பதில் இந்த படத்தில் மேகா ஆகாஷ் இணைவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் சமீபத்தில் வெளியான சிம்புவின் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் பழனியில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஊட்டி செல்லவுள்ளனர். இசையை மையமாக கொண்ட இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து வருகிறர். சந்திரா ஆர்ட்ஸ் இசக்கிதுரை தயாரித்து வரும் இந்த படத்தில் இயக்குனர் மகிழ்திருமேனி வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.