close
Choose your channels

மெலடி இசை அரசர் இமான் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Monday, January 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

தளபதி விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2002ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான டி இமான், அதன் பின்னர் ’தலைநகரம்’ ’திருவிளையாடல் ஆரம்பம்’ ’மருதமலை’ ’மாமணியே’ உள்பட பல திரைப் படங்களுக்கு இசையமைத்தார்.

அதன்பின்னர் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்த டி.இமான், விஜய் நடித்த ’ஜில்லா’ அஜித் நடித்த ’விஸ்வாசம்’ ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ சிவகார்த்திகேயன் நடித்த ’ரஜினி முருகன்’ சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். டி.இமான் கம்போஸ் செய்த மெலடி பாடல் அனைத்துமே ஹிட் என்பதால் அவர் ரசிகர்களால் மெலடி இசை அரசர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

இசையமைப்பு மட்டுமின்றி டி இமான் பல பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் டி இமான்அவர்களுக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.