வைரலாகும் மீம் கோகுலின் குடும்ப புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

மீம் கலைஞராக இருப்பவர் என்று சொல்வதைவிட ’மானாட மயிலாட’ கோகுல் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் குரலில் பேசுபவர் கோகுல் தான் என்றும் கூறப்படுவதுண்டு

இந்த நிலையில் கோகுலின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கோகுல் மற்றும் அவரது மனைவி இரண்டு குழந்தைகளுடன் கூடிய இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்

‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்ற கோகுல், ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். நடனம் மட்டுமின்றி பல்வேறு திறமைகள் கொண்டவர் இவர் என்பதால் இவரை ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்றே கூறுவார்கள்

மேலும் இவர் தற்போது ஒரு அகடமியை நடத்தி வருகிறார் என்பதும், இதன் மூலம் திறமையுள்ள சிறுவர்-சிறுமிகளை கண்டுபிடித்து அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வருவதே இவரது நோக்கமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கின்னஸ் சாதனை உள்பட பல்வேறு சாதனைகள் செய்து உள்ள இவர் தன்னிடம் பயிலும் சிறுவர் சிறுமிகளையும் கின்னஸ் சாதனை செய்யவைத்து செய்ய ஊக்கம் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.