close
Choose your channels

அஜித் அனுமதியுடன் தான் இதை செய்கிறேன்: மேரல் யாஸர்லூ 

Friday, September 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் அஜித்தை சந்தித்த உலகை சுற்றிய இளம்பெண் மேரல் யாஸர்லூ, அஜித்தின் அனுமதியுடன் இந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், நடிகராக மட்டுமின்றி பல்வேறு தொழில்துறைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவரது முக்கிய பொழுது போக்குகளில் ஒன்று பைக் ரைட் செய்வது. ஏற்கனவே இந்தியாவில் சுமார் 5000 கிலோ மீட்டருக்கு மேல் பைக்கில் சென்றுள்ள அஜீத் விரைவில் உலகம் முழுவதும் பைக்கில் சுற்ற முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் ஏழு கண்டங்களில் உள்ள 64 நாடுகளில் பைக்கில் சுற்றிய மேரல் யாஸர்லூ என்பவரை சமீபத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிஎம்டபிள்யூ மோட்டார்ஸ் என்னை தொடர்பு கொண்டு ஒரு சக ஓட்டுநர் உங்களை சந்திக்க விரும்புகிறார், அவர்தான் அஜித் என்று கூறினார்கள். அதன் பின்னர் நானும் அஜித்தும் மெசேஜ்களை பரிமாறிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க முடிவு செய்தோம்.

அஜித்தை பற்றி நான் கூகுளில் தெரிந்து கொண்டபோது தென்னிந்தியாவில் அவர் மிகப்பெரிய நடிகர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் எந்த அளவுக்கு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறார் என்பது அவருடன் எடுத்த புகைப்படம் வைரலானதில் இருந்து தெரியவந்தது. நான் ஒருவரின் தொழிலை வைத்து மதிப்பிட மாட்டேன், ஒரு மனிதனாக அவர் எப்படி இருக்கிறார் என்று தான் நான் பார்த்தேன்.

அந்த வகையில் அஜீத் அவர்களை பார்த்தவுடன் அவர் மிகவும் சிறந்த ஒரு பண்பாளர், அடக்கமானவர், மரியாதையுடனும் மென்மையுடன் பேசுவார் என்பதை புரிந்து கொண்டேன். அவரை ஒரு நடிகராக தெரிந்து கொண்டதை விட ஒரு நல்ல மனிதராக தெரிந்து கொண்டேன். அவர் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை என்பது கேள்விப்பட்டவுடன் நான் ஆச்சரியமடைந்தேன். அவருடன் எடுத்த இந்த புகைப்படங்களை கூட நான் அவருடைய அனுமதியுடன் தான் வெளியிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அஜீத் ரசிகர்களுக்கு இந்த பதிவு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.