close
Choose your channels

தமிழகத்தில் மெர்க்குரி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, April 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மெர்க்குரி திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் வசனமே இல்லாத ஊமைப்படம் என்பதால் இந்த படத்திற்கு மொழி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தமிழகத்தில் மட்டும் கோலிவுட் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாகவும், எந்தெந்த படங்கள் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டது,

இந்த நிலையில் வரும் வெள்ளி முதல் தமிழகத்தில் 'மெர்க்குரி' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உறுதி செய்வது போல் சென்னையில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் முன்பதிவும் தொடங்கிவிட்டது. 

பிரபுதேவா, சனத் ரெட்டி, இந்துஜா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்,. திரு ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.