விஜய் விருதுகள்: விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு 4 விருதுகள்

  • IndiaGlitz, [Monday,June 04 2018]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி வசூல் அளவிலும் மிகச்சிறந்த வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் இந்த படத்திற்கு 4 விருதுகள் கிடைத்தது. சிறந்த படம் என்ற விருதை பெற்ற மெர்சல் அதன் பின்னர் சிறந்த வில்லன் விருது எஸ்.ஜே.சூர்யாவுக்கும், ஃபேவரேட் இயக்குனர் விருது அட்லிக்கும், சிறந்த பாடலாக 'ஆளப்போறான் தமிழன்' பாடலுக்கும் கிடைத்துள்ளது.

இருப்பினும் இந்த படத்தில் மூன்று வேடங்களில் சிறப்பாக நடித்த விஜய்க்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த விருது 'விக்ரம் வேதா' படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிறந்த நடிகை விருது 'அறம்' படத்தில் நடித்த நயன்தாராவுக்குm சிறந்த இசையமைப்பாளர் என்ற விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'காற்று வெளியிடை' படத்திற்கும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கர்நாடக முதல்வருடன் கமல் சந்திப்பு! 'காலா' குறித்து பேசுவாரா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நிலையில் இன்று மீண்டும் அவரை சந்திக்க பெங்களூர் செல்கிறார்

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் கீர்த்திசுரேஷ்

'நடிகையர் திலகம்' படத்தின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் கீர்த்திசுரேஷ். நடிகையர் திலகம் சாவித்திரியை அப்படியே கண்முன் கொண்டு வந்த கீர்த்திசுரேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே

தளபதியின் 'மெர்சல்' செய்த மேலும் ஒரு சாதனை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை உலகம் முழுவதும் அடைந்தது என்பது தெரிந்ததே

த்ரிஷாவை பாராட்டிய மக்கள் செல்வன்

கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, முதல்முறையாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் '96' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் தளபதி விஜய்யின் 'போக்கிரி' ஆட்டம் ஆரம்பம்

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'போக்கிரி.