தமிழாலே ஒன்னானோம் மாறாது எந்நாளும் மெர்சல் பட டீசர் கூறுவது என்ன?

  • IndiaGlitz, [Thursday,August 10 2017]

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் டீசர் வீடியோ நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு இணையதளத்தில் வெளியாகி பெரும் சுனாமியை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு தொடர்புடைய முதல் போஸ்டரும், நேற்று வெளியான இரண்டாவது போஸ்டரும் தமிழகம் முழுவதும் மெர்சலான நிலையில் இந்த சிங்கிள் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலானாது.

“தமிழாலே ஒண்ணானோம்... மாறாது எந்நாளும்” இந்த சிங்கிள் பாடல் வரிகள் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் மெரினாவில் நடந்த மாணவர்களின் புரட்சி போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எழுந்த எழுச்சி குரல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிகள் இந்த பாடலில் இருப்பதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் ஆதரவும் இந்த டீசருக்கு கிடைத்துள்ளது என்பது கமெண்ட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.

ஏற்கனவே கமல், ரஜினி அரசியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் அரசியல் பாதைக்கு இந்த பாடலும் படமும் நுழைவு வாயிலாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் நயன்தாரா?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் உள்ளது. இந்த படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

அரவிந்தசாமி-த்ரிஷாவின் 'சதுரங்க வேட்டை 2' டீசர் ரிலீஸ் தேதி

நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளிவந்த 'சதுரங்க வேட்டை' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றிருந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான 'சதுரங்க வேட்டை 2' என்ற திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றங்களை செய்வதை மையமாகக் கொண்டு உருவாகி வந்தது...

பெண் பத்திரிகையாளர் தன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு

பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் சமீபத்தில் விஜய் நடித்த 'சுறா' படத்தை எதிர்மறையாக விமர்சிக்கும் பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்

ஹாலிவுட் நடிகையின் ஹேர் ஸ்டைலுக்கு மாறிய ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மன அழுத்தம் காரணமாக வெளியேறிய ஓவியா, கடந்த ஞாயிறு சென்னை சிட்டி செண்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.

சிம்புவின் அடுத்த படம் ஹாலிவுட் படமா?

சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை அடுத்து அவர் தற்போது ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.