போலந்து செல்லும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரருக்கு உதவிய தமிழ் நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,August 10 2021]

போலாந்து நாட்டிற்கு சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள செல்லும் திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு தமிழ் நடிகர் ஒருவர் உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

திருச்சி துறையூர் சேர்ந்த நாகலாபுரத்தில் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் மணிகண்டன். இவர் போலந்து நாட்டில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்தநிலையில் தமிழ் நடிகர் மெட்ரோ சிரிஷ் அவர்கள் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஷூ ஒன்றை மணிகண்டனுக்கு அனுப்பியுள்ளார். மேலும் அவர் மணிகண்டன் சர்வதேச போட்டியில் வெற்றி பெறுவதற்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மணிகண்டனுக்கு மெட்ரோ சிரிஷ் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு

உன் வாழ்வின் உயரம் என்பது உன் மன உறுதியின் பொறுத்தே அமைந்தது. இது வள்ளுவரின் வாக்கு. எவ்வளவு துன்பங்கள் தடைகள் வந்தாலும் மன உறுதியை மட்டும் விட்டுவிடாதே. போலந்தில் நடைபெறும் சர்வதேச தடகள போட்டியில் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து மணிகண்டனின் தாயார் கூறும்போது ’எனது மகனுக்காக உதவி செய்த மெட்ரோ சிரிஷ் அவர்களை எனது இன்னொரு மகனாகவே நான் நினைக்கிறேன். அவருக்கு எனது நன்றி’ என்று கூறியுள்ளார்.

More News

33 வயதில் சீரியல் நடிகை திடீர் மரணம்.....! சோகத்தில் ரசிகர்கள்....!

மூளைப்புற்றுநோயால் பாதிப்படைந்த நடிகை நடிகை சரண்யா சசி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பிறந்தநாளுக்கு பிகினி புகைப்படம் பதிவிட்ட நடிகை ஹன்சிகா… வைரல் பிக்!

தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என அன்போடு அழைக்கப்பட்டு வருவபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

காலில் கட்டுடன் யாஷிகாவின் சமீபத்திய புகைப்படம்....! ஆறுதல் கூறும் ரசிகர்கள்....!

மருத்துவமனையில் காலில் கட்டுடன் யாஷிகா ஆனந்த் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் யாஷிகாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்

இந்தியாவிற்காக ஒலிம்பிக் ஜோதியை சுமந்த இளம்பெண்… இன்று தினக்கூலியாக மாறிய அவலம்!

கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான ரிலேவில் இந்தியா சார்பாக 17 வயதேயான பிங்கி கர்மாகர் என்பவர்தான் கலந்துகொண்டார்

நீரஜ் சோப்ரா பெயருள்ள அனைவருக்கும் பரிசு: அதிரடி அறிவிப்பு

சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்று கொடுத்து பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது