மெட்ரோ சிரிஷின் 'பிஸ்தா': 'என்னை கொல்ல வந்த' லிரிக் பாடல் ரிலீஸ்

  • IndiaGlitz, [Friday,September 30 2022]

மெட்ரோ சிரிஷ் நடிக்கும் 'பிஸ்தா’ படத்திலிருந்து செகண்ட் சிங்கிள் ட்ராக்காக ’என்னை கொல்ல வந்த’ பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான ’மெட்ரோ’ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் 'பிஸ்தா’

இந்த படத்தில் மிர்துளா முரளி நாயகியாக நடிக்க அருந்ததி நாயர், சதீஷ், பிரபல காமெடி நடிகர் செந்தில், யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

எம் ரமேஷ் பாரதி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஒன் மேன் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக புவனேஸ்வரி சம்பாசிவம் தயாரிக்கிறார். எம் விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் தரண் குமார் படத்திற்கு இசையமைக்க இயக்குனர் ரமேஷ் பாரதி, யுக பாரதி, ஆர் ஜே விஜய் பாடல் வரிகளையும் எழுதி உள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து தற்போது ’என்னை கொல்ல வந்த’ என்ற இரண்டாவது சிங்கிள் ட்ராக் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் உலகம் முழுவதும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டீன் ஏஜ் பெண்ணுக்கு இணையாக டான்ஸ் ஆடும் 55 வயது நதியா.. செம வீடியோ

நடிகை நதியா கடந்த 80, 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் என்பதும் அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் என்பதும் தெரிந்ததே. 'பூவே பூச்சூடவா' என்ற படத்தில் அறிமுகமாகி அதன்

'கேஜிஎஃப்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் 'விக்ரம்' - 'சூரரைப்போற்று கனெக்சன்!

'கேஜிஎஃப்' மற்றும் 'கேஜிஎஃப்' 2' ஆகிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்த நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள திரைப்படத்தில் கமல்ஹாசனின் 'விக்ரம்' மற்றும் சூர்யாவின் 'சூரரைப்போற்று கனெக்ஷன்

விஷால் வீடு தாக்குதல், சிவில் இஞ்ஜினியர் உள்பட 4 பேர் கைது: தாக்குதலுக்கு கூறிய அதிர்ச்சி காரணம்!

 சமீபத்தில் நடிகர் விஷாலின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விஷால் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது

'அந்த ஆறு பேருமே ஒருத்தன் தான்.. கார்த்தியின் 'சர்தார்' டீசர்

 கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தி,ல் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சர்தார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள்

முதல்முறையாக பொறாமைப்படுகிறேன்: 'பொன்னியின் செல்வன்' குறித்து மீனாவின் பதிவு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில்