'மெட்டி ஒலி' சீரியல் நடிகை காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Sunday,October 17 2021]

மெட்டி ஒலி சீரியலில் நடித்த பிரபல நடிகை ஒருவர் திடீரென காலமானது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிய சீரியல் ‘மெட்டி ஒலி’ என்பதும் திருமுருகன் இயக்கத்தில் உருவாகிய இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி உள்பட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்த சீரியலில் விஜயலட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருந்த உமா மகேஸ்வரி என்ற நடிகை திடீரென இன்று காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ்பெற்ற உமாமகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 40 என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரி மறைவை அடுத்து சின்ன திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

More News

இந்த வாரம் வெளியேறுவது இந்த ஐவரில் ஒருவர்: கமல்ஹாசன் அறிவிப்பு

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு 15 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் 10 பேர் காப்பாற்றப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அபிஷேக்கும் இல்லை, சின்னப்பொண்ணும் இல்லை, இந்த வார எலிமினேட் இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஒருவரை எலிமினேட் செய்வதற்காக 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர் என்பதும் தலைவி தாமரைச்செல்வி மற்றும் பாவனி ரெட்டி தவிர

பிக்பாஸ் நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர்: அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் நடிகை ஒருவரை தென்னிந்திய இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது

அடுத்த வருஷம் என்ன பிளான்? தோனியின் பதிலால் உற்சாகமடைந்த ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சி பதவியில் அடுத்த ஆண்டும் தொடருவேன் என்று மகேந்திரசிங் தோனி நேற்று

இந்தியாவில் அறிமுகமாகும் 6ஜி சேவை? சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியா முழுக்க தற்போது 4ஜி சேவை பரவலாகி இருக்கிறது. ஆனால் இதற்கிடையில் சீனா, தென்கொரியா,