எம்ஜிஆர் நினைவு தினத்தில் சூளுரை ஏற்ற இபிஎஸ், ஓபிஎஸ்!!!
- IndiaGlitz, [Thursday,December 24 2020]
அஇஅதிமுக கட்சியின் நிறுவனரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில் எம்ஜிஆர் நினைவு தினத்தில் அதிமுகவை அரியணையில் அமர வைப்போம் என்று சூளுரை செய்வோம் என பதிவிட்டு உள்னர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், “சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித் தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச் செம்மலின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.
அதேபோல துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள தனது டிவிட்டில், “அழியாப் புகழுடன் தமிழக மக்களின் மனதில் சரித்திரமாய் நிலை கொண்டு நிற்கும் பொன்மனச் செம்மல். தமிழகத்தின் உரிமைகளை காத்த காவல் காரன். தமிழ் பயிர் செழிக்கச் செய்த விவசாயி. தமிழக மக்களின் வாழ்வில் மாற்றமும் ஏற்றமும் தந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.
ஏழைகளின் இதயக்கனி, மறைந்தும் மறையாமல் சுடர்விடும் மாணிக்க பொன்னொளி மக்கள் திலகம். அவர்களின் நினைவுநாளில் புரட்சித் தலைவர் காட்டிய பாதையில் நடை பயின்று இதய தெய்வம் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் வழிநடந்து அம்மாவின் அரசை மீண்டும் அரியணையில் அமர்த்த இந்நாளில் உறுதி ஏற்போம்” எனப் பதிவிட்டு உள்ளார்.
சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவுநாளில் அவரை நினைவு கூர்கிறேன். pic.twitter.com/Act94GzN8E
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 24, 2020
ஏழைகளின் இதயக்கனி, மறைந்தும் மறையாமல் சுடர்விடும் மாணிக்க பொன்னொளி மக்கள்திலகம் #MGR அவர்களின் நினைவுநாளில் புரட்சித்தலைவர் காட்டியபாதையில் நடைபயின்று இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் வழிநடந்து அம்மாவின் அரசை மீண்டும் அரியணையில் அமர்த்த இந்நாளில் உறுதி ஏற்போம்
— O Panneerselvam (@OfficeOfOPS) December 24, 2020