எம்.ஜி.ஆர் இயக்கத்தில் “பொன்னியில் செல்வன்“ திரைப்படமா? ஆச்சர்யமூட்டும் வரலாற்றுச் சேதி!

  • IndiaGlitz, [Wednesday,July 21 2021]

இயக்குநர் மணிரத்னம் தனது கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். இதன் முதல் பாகத்தின் அட்டகாசமான போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் “எம்ஜியார் பிக்சர்ஸ்“ அளிக்கும் கல்கியின் “பொன்னியின் செல்வன்“ -டைக்ரஷன் “எம்.ஜி.ஆர்“ எனும் போஸ்டர் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய “பொன்னியின் செல்வன்“ வரலாற்றுத் தொடரானது கடந்த 1950 முதல் 1954 வரை “கல்கி“ இதழில் வெளியாகி அன்றைய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதையடுத்து இந்தக் கதையை முதன் முதலில் திரைப்படம் ஆக்க வேண்டும் என விரும்பியவர் எம்.ஜி.ஆர்தான். இதற்காக கதையின் உரிமையை ரூ.10 ஆயிரம் கொடுத்து விலைக்கும் வாங்கியும் இருக்கிறார். பின்னர் சில இயக்குநர்களை அணுகி கதையை எடுப்பது குறித்த அவர்களிடம் ஆலோசனையும் செய்தாராம்.

ஆனால் இந்த முடிவை கைவிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் தனது “எம்ஜியார் பிக்சர்ஸ்“ தயாரிப்பில் தானே இயக்குவது என முடிவெடுத்தார். இதனால் எம்ஜிஆர் தானே தயாரித்து, இயக்க இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாராம். கூடவே ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி, நம்பியார், எம்.என்.ராஜம், டி.எஸ் பாலையா எனப் பலரும் நடிக்கவிருந்தனர்.

இதற்கு பின்னர்தான் எம்ஜியார் பிக்சர்ஸ்“ அளிக்கும் கல்கியின் “பொன்னியின் செல்வன்“ -டைக்ரஷன் “எம்.ஜி.ஆர்“ எனும் போஸ்டர்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் எம்ஜிஆர் தான் இயக்க இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பின்னாளில் கைவிடும் நிலைமை ஏற்பட்டது தமிழ் சினிமாவிற்கே பெரும் இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

ஒருமுறை மேடை நாடகத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர் அவர்கள் சீர்காழிக்கு காரில் சென்றபோது திடீரென விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடையவே அவருக்கு 6 மாதங்கள் தேவைப்பட்டு இருக்கின்றன. இதனால் ஏற்கனவே பாதியில் இருந்த திரைப்படங்களில் அவர் கவனம் செலுத்தி இருக்கிறார்.

அந்த வகையில் “மலைநாட்டு இளவரசன்”, “சிரிக்கும் சிலை”, “சிலம்புக்குகை”, “தூங்காதே தம்பி தூங்காதே’‘ போன்ற திரைப்படங்களை ஒரே நேரத்தில் அவர் நடித்து முடித்து இருக்கிறார். இந்த பிசியில் பொன்னியில் திரைப்படம் குறித்து அவர் மறந்தே போய் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆருக்குப் பின்பு கடந்த 1990 வாக்கில் நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக்க நினைத்து இருக்கிறார். ஆனால் இதுவும் கடைசியில் தோல்வியையே தழுவி இருக்கிறது.

ஆனால் இந்த நாவல் பலமுறை மேடை நாடகங்களில் நடிக்கப்பட்டு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த விஷயத்தில் மேஜிக் லேன்டர்ன் எனும் நாடகக் குழுவைத்தான் நாம் பாராட்ட வேண்டி இருக்கிறது. 5 பாகங்கள், 2,400 பக்கங்கள் கொண்ட இந்த வரலாற்றுக் கதையை மிக அழகாக 4 மணிநேரம் கொண்ட நாடக வடிவில் இந்தக்குழு பல இடங்களில் காட்சிப் படுத்தியது.

வெளிநாடுகளில் கூட இந்தக் குழு, பொன்னியில் செல்வன் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. ஆனால் சினிமா வடிவில் கொண்டு வர நினைத்த பல பிரபலங்களின் கனவுகள் இதுவரை நிறைவேறாமலேயே இருந்து வந்தன. இதற்கு முன்பு மக்கள் தொலைக்காட்சி இந்தக் கதையை தொலைக்காட்சித் தொடராக மாற்றும் முயற்சியில் இறங்கியது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்து இருக்கிறது.

தற்போது முதல் முறையாக லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் தனது கனவு திரைப்படமாக நினைத்து உருவாக்கி வருகிறார்.

மேலும் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி எனப் பல முக்கிய நடிகர்கள் இதில் இணைந்து நடித்து வருகின்றனர்.

More News

வனிதா-ரம்யா கிருஷ்ணன் மோதலில் நடந்தது என்ன? வைரல் வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியின்போது நடிகைகள் வனிதா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும்

பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: 5 பேர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!

பிரபல பின்னணி பாடகி ஒருவரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல்

யாஷிகாவின் டுவிட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேம்ஜி! காரணம் என்ன?

பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை யாஷிகாவின் டுவிட்டை பார்த்து நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார் 

ஏ.ஆர்.ரஹ்மானை யாரென்றே தெரியாது: சீனியர் நடிகரின் பேட்டியால் பரபரப்பு!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா உலகிலும், ஏன் உலக அரங்கிலும் ஏஆர் ரஹ்மான் புகழ்பெற்றவர் என்பதும், இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பதும்

"நானும் பிராமணனே"....! நேரலையில் சர்ச்சையை கிளப்பிய பிரபல கிரிக்கெட்டரின் பேச்சு....!

நேரலையில் பேசும் போது, "நானும் பிராமணன் தான்"  என்று சுரேஷ் ரெய்னா கூறியிருப்பது,