close
Choose your channels

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படக்குழுவுக்கு பிரபல நடிகை எச்சரிக்கை

Thursday, June 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண்களின் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றால் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' அடுத்த பாகத்தில் இருந்து விலகிவிடுவேன் என்று பிரபல ஹாலிவுட் நடிகையும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தில் வின் டீசலுக்கு ஜோடியாக நடித்து வருபவருமான நடிகை மிட்செல் ராட்ரிக்ஸ் படக்குழுவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படங்களின் 8 பாகங்களும் இந்தியா உள்பட உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இன்னும் இரண்டு பாகங்கள் வெளியாகவுள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றில் நடித்து வரும் நடிகை மிட்செல் ராட்ரிக்ஸ் இனிவரும் அடுத்த இரண்டு பாகங்களில் பெண் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் இல்லையென்றல் படத்தில் இருந்து விலகிவிடுவேன் என்றும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு படக்குழுவினர்களை வியப்படைய செய்துள்ளது.
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் 8ஆம் பாகத்தில் வின் டீசல், ட்வெய்ன் ஜான்சன் ஆகியோர்களின் கேரக்டர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சார்லி தெரோன் தவிர மற்ற பெண் கேரக்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்தே நடிகை மிட்செல் ராட்ரிக்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.