நான் என்ன அஜித், விஜய் படத்தையா இயக்கியுள்ளேன்: சிம்பு படத்தயாரிப்பாளர் ஆதங்கம்

  • IndiaGlitz, [Wednesday,November 13 2019]

சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்கவிருக்கும் இயக்குனர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் சமீபத்தில் ‘மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஊடகங்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்த போதிலும் போதிய திரையரங்கம் மற்றும் மாலை, இரவு காட்சிகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வசூல் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் சுரேஷ் காமாட்சி கூறியபோது, ‘கடந்த நவம்பர் 8ம் தேதி ’மிக மிக அவசரம்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் தான் தரப்படுகிறது. காலை மற்றும் மதியம் காட்சிகளில் யார் திரையரங்கிற்கு வருவார்கள்? நான் என்ன விஜய், அஜித் படத்தையா எடுத்திருக்கிறேன்? என ஆதங்கத்துடன் கூறியுள்ளார். மேலும் சின்ன பட்ஜெட் படங்கள் சாவடிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மிக மிக அவசரம் படத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட பல முக்கிய தலைவர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தற்போது ஆர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்

ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் ப்ரியா பவானிசங்கர். எஸ்ஜே சூர்யாவின் 'மான்ஸ்டர்', கடைக்க்குட்டி சிங்கம் உள்ளிட்ட ஒரு சில வெற்றிபடங்களில் நடித்த ப்ரியா பவானிசங்கர்

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் த்ரில் பட இயக்குனர்?

தளபதி விஜய், மாளவிகா மேனன், ஆண்ட்ரியா உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ்

சல்மான்கான் படத்தில் பரத் வில்லனா? அதிகாரபூர்வ தகவல்கள்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கும் 'ராதே' என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் தமிழ் நடிகர் பரத் நடித்த உள்ளதாக வெளிவந்த செய்தியில் ஏற்கனவே பார்த்தோம்.

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!

'இதுதாண்டா போலீஸ்' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகர் ராஜசேகர்.