close
Choose your channels

'மிக மிக அவசரம்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Monday, October 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுரேஷ் காமாட்சி இயக்கிய ’மிக மிக அவசரம்’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் திடீரென ’அருவம்’ மற்றும் ’பெட்ரோமாக்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகியதால் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த தியேட்டர்கள் குறைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் வெறும் 17 தியேட்டர்கள் மட்டுமே இந்த படத்திற்கு ஒதுக்கப்பட்ட்டது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானது

இந்த நிலையில் ’மிக மிக அவசரம்’ படத்திற்காக ஒதுக்கப்பட்ட தியேட்டர்கள் திடீரென வாபஸ் பெறப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் பாரதிராஜா தனித்தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதுபோன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தயாரிப்பாளர் சங்கம் சங்கம் மற்றும் சங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் பாரதிராஜா தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது ’மிக மிக அவசரம்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் எட்டாம் தேதி வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியிலாவது இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் ஒதுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.