ஓபிஎஸ் அணியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்?

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக அரசியல் சதுரங்க விளையாட்டு உச்சகட்டத்தில் உள்ள நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் கை ஓங்கி வருகிறது என்பது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் செய்திகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அசோக்குமார் மற்றும் நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம் ஆகிய இரண்டு அதிமுக எம்பிக்களும், மாஃபா பாண்டியராஜன் என்ற அமைச்சரும் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சரான ஜெயகுமார் அவர்களும் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. வெகுவிரைவில் அவர் ஓபிஎஸ் அவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரை அடுத்து சிறுபான்மை துறை அமைச்சர் நிலோபர் கபில், பால் வளத்துறை-ராஜேந்திர பாலாஜி, வணிக வரித்துறை-கே.சி. வீரமணி ஆகிய அமைச்சர்கள் இன்று மாலையே ஓ.பி.எஸ். வீட்டுக்குச் சென்று ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது

More News

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு? புதிய தகவல்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலா அணிக்கு 130 எம்.எல்.ஏக்களும், முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு 4 எம்.எல்.ஏக்களும் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது.

சென்னை விடுதிகள் திடீர் சோதனை. கமிஷனர் ஜார்ஜ் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்ப நிலை நீடித்து வரும் நிலையில் இந்த நிலையை பயன்படுத்தி சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக காவல்துறையினர்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி எதிரொலி. கூவத்தூர் செல்கிறார் சசிகலா

கூவத்தூரில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றெழுத்துக்காரரின் 75 நாள் மௌனத்தின் மாமர்மம். பார்த்திபனின் அரசியல் கவிதை

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி கமல்ஹாசன், விசு, கங்கை அமரன் போன்ற திரையுலகினர்களும் தைரியமாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஓரளவுக்குத்தான் பொறுமை. அதற்கு மேல் செய்ய வேண்டிதை செய்வோம். சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மங்கிக்கொண்டே வருவதாக கூறப்படும் நிலையில்...