கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க வேண்டுமா? அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Tuesday,September 25 2018]

கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார். அவருடைய ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என போலீசார் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 'கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக ஏன் நீடிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டவிதிகளை மீறி பேசக்கூடாது என்றும் பல்வேறு சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கருணாஸை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதேபோல் சாதி, மத கலவரங்களை உருவாக்கும் விதத்தில் யார் பேசினாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

More News

பொங்கல் ரேஸில் இணைகிறதா ரஜினியின் 'பேட்ட'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

ஹாலிவுட் ரீமேக்கில் சீயான் விக்ரம்?

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'சாமி 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நல்ல வசூலை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

வெள்ளத்தில் சிக்கிய 'தேவ்' படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு?

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடித்து வரும் 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் படப்பிடிப்பு ரத்தாகியது

காதலும் நட்பும்: ஐஸ்வர்யாவை தூக்கி நிறுத்த படாதபாடு படும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் நிலையில் வீட்டின் உள்ளே இருக்கும் நான்கு பேரை வைத்து ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியாது என்பதால்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: கோபி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 2000ஆம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார்.