close
Choose your channels

விஜய் அரசியலுக்கு வந்தால்..? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Saturday, August 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றும் யார் யாரோ அரசியலுக்கு வரும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன? என்றும், விஜய் அரசியலுக்கு வந்தால் தான் ஆதரிப்பேன் என்றும் நேற்று நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதுகுறித்து நேற்று ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் அரசியலுக்கு வருவது குறித்த சீமான் கருத்துக்கு பல்வேறு பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 'நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என சீமான் கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார்.

விஜய் இதுவரை ஒரு மேடையில் கூட அரசியலுக்கு வருவது குறித்து பேசவில்லை. ஆனால் ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் அவர் அரசியலுக்கு வந்தால்.. என உசுப்பேற்றி வருவது சரியா? என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.