ரஜினியும் கமலும் சேர்ந்தால் ஒரே ஒரு நல்லது நடக்கும்: அமைச்சர் ஜெயகுமார்

வரும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒன்றும் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்தித்தால் அதிமுக மற்றும் திமுக எந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ’அதிமுக என்பது வலுவான அஸ்திவாரம் உள்ள ஒரு கட்சி என்றும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வளர்த்துவிட்ட இந்த கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றும், ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட யார் புதிதாக கட்சி ஆரம்பித்தாலும் அதிமுக ஓட்டு வங்கியில் யாரும் கை வைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் ரஜினி, கமல் இருவரும் இணைந்து தேர்தலை சந்தித்தால் திமுக உள்பட மற்ற கட்சிகளுக்கு தான் பாதிப்பு ஏற்படுமே தவிர அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார் மேலும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்தால் 16 வயதினிலே’ போன்ற ஒரு நல்ல படம் உருவாக மட்டுமே வாய்ப்புள்ளது அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்