'தி பேமிலி மேன்-2' தொடரை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டா? அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சமந்தா, ப்ரியாமணி உள்பட பலர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ’தி பேமிலி மேன்-2’ என்ற வெப்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சீமான் உள்பட ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’தி பேமிலி மேன்-2’ தொடரை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’தி பேமிலி மேன்-2’ தொடரை தடை செய்வது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

’தி பேமிலி மேன்-2’ வெப்தொடரை தமிழக அரசு எதிர்க்கிறது என்றும், ஆனால் அதே நேரத்தில் அந்த தொடரை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார். தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ’தி பேமிலி மேன்-2’ தொடரை தடை செய்யுமா மத்திய அரசு? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

More News

ஜெ. வழக்கின் முக்கிய அதிகாரி ஜி.சம்மந்தம் உயிரிழந்தார்....!

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்க&#

எனது அடுத்த படத்தில் 'பயணம்' முக்கிய பங்கு வகிக்கும்: கிருத்திகா உதயநிதி

'வணக்கம் சென்னை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி சமீபத்தில் தனது மூன்றாவது படம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்

வாடகை ஆட்டோ, கார்களில் பயணிக்க இ-பதிவு... பெறுவது எப்படி?

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை குறைந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டள்ளது.

லைவில் தற்கொலை முயற்சி… தக்க சமயத்தில் காப்பாற்றிய ஃபேஸ்புக் நிறுவனம்!

டெல்லியில் வசித்து வந்த 39 வயதான நபர் ஒருவர் ஃபேஸ்புக் லைவிலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இருவேறு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டால் ஆபத்தா? தடுப்பூசியில் கலப்பு அவசியமா?

முன்னதாக முதல் டோஸ் செலுத்திக் கொண்ட கொரோனா தடுப்பூசியே (28 நாட்கள் இடைவெளியில்) அடுத்த முறையும் செலுத்திக் கொள்ள வேண்டும்