close
Choose your channels

குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது!!! காரணம் என்ன தெரியுமா???

Saturday, June 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது!!! காரணம் என்ன தெரியுமா???

 

மடகாஸ்கரில் கோவிட் ஆர்கானிக் என்ற மூலிகை மருந்து கொரோனா நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்த மருந்தை அந்நாட்டின் அதிபர் ஆண்டரி ராஜோலினா நேரடியாக குடித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதைத் தொடர்ந்து பல ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் கோவிட் ஆர்கானிக் மூலிகை மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் உலகச் சுகாதார அமைப்பின் ஒப்புதலைப் பெறவும் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. ஆர்ட்டெமிசியா என்ற மூலிகைத் தாவரத்தைப் பதப்படுத்தி கோவிட் ஆர்கானிக் தயாரிக்கப் படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் தற்போது இந்த மருந்து கொடுக்கப் பட்டு வருகிறது. முக்கியமாக பள்ளிகள் கல்லூரிகள் போன்ற இடங்களில் கட்டயாமாக்கப் பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே இத்தகைய செயல்திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த மருந்தின் பயன்பாட்டால் அந்நாட்டில் ஓரளவிற்கு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கோவிட் ஆர்கானிக் மூலிகை மருந்துக்கு இதுவரை உலகச் சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆதோடு இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகத்தையும் சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பெரும்பாலானவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு வருவதால் தற்போது மடகாஸ்கரில் முழுவதுமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் மடகாஸ்கர் நாட்டின் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் ரிஜசோவா அன்ரியாமன்னா பள்ளிக் குழந்தைகள் கோவிட் ஆர்கானிக் மூலிகை மருந்தைக் குடிக்கும்போது கசப்பாக இருக்கும். எனவே மருந்தைக் குடிக்கம் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 3 லாலிபாப் மிட்டாய்களைக் கொடுக்கலாம் என்ற புதுத் திட்டத்தைச் செயல்படுத்த நினைத்திருக்கிறார். இத்திட்டம் முறையாக ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் அதிபருக்கு அறிவிக்கப்படவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் கல்வி அமைச்சர் லாலிபாப்களை வாங்குவதற்கு செலவு செய்ய இருந்த பணத்தின் அளவு அதிகமாக இருந்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. 2 மில்லியன் அமெரிக்க டாலரை இத்திட்டத்திற்கு கல்வி அமைச்சர் ஒதுக்கி இருந்தார். இந்திய ரூபாயில் இது 14 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.