10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

  • IndiaGlitz, [Wednesday,April 08 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ளன

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் பாஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆனால் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மட்டும் இன்னும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதால் அதற்கு அடுத்த நாளே பொதுத் தேர்வை சந்திக்க மாணவர்கள் தயாராக உள்ளார்களா? தேர்வின் போது சமூக விலகலை கடைபிடிக்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்

இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து கருத்து கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ‘10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

கமல் லட்டரை படிச்சு முடிக்கிறதுக்குள்ள கொரோனாவே போயிடும்: பாஜக பிரபலம் கிண்டல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.

ரெண்டு அப்பாவி பசங்கள ஏமாத்தியிருக்கேன்: விஜே மணிமேகலையின் வைரல் வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முதல் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் முக்கிய நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் விளையாட்டுத்தனமான

இரண்டே வாரத்தில் டேமேஜ் ஆன சென்னை மால் திரையரங்குகள்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

வெறும் 9 நாட்களில் பிரிட்டன் அரசு உருவாக்கிய பிரம்மாண்ட மருத்துவமனை!!!

கொரோனா வைரஸின் மையப்பகுதியாக தற்போது ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன

பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது? மத்திய அரசின் முக்கிய பரிந்துரை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 24ஆம் முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.