கமல் ஹாசனின் கனவு பலிக்காது: அமைச்சர் வைகை செல்வன்

  • IndiaGlitz, [Monday,March 13 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் வேறொரு தலைமைக்காகத்தான் வாக்களித்தார்கள். ஆனால் இப்போது அந்த தலைவர் இல்லை. எனவே தமிழகத்தில் புதியதாக சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக அமைச்சர் வைகைச்செல்வன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: ''ஜனநாயகம் என்பது என்ன? 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்ய மக்கள் அனுமதி அளித்துள்ளனர் என்றுதான் அர்த்தம். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தான் தொடர்ந்து ஆட்சியில் இருந்தார். அவருக்குப் பின்னர் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது முறை அதிமுக ஆட்சியைப் பிடித்தது. இதற்குக் காரணம் அம்மாதான்.
அவரது மறைவுக்குப் பின்னர் மக்களுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம். 122 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆட்சி 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும். ஏழை, எளிய மக்களின் இயக்கம் இது. நடிகர் கமல் ஹாசன் கனவு பலிக்காது'' என்று கூறியுள்ளார்.

More News

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ரஜினி பட நாயகி?

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அதிக படங்கள் நடித்து கொண்டிருக்கும் நடிகர் என்றால் அவர் விஜய்சேதுபதிதான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

பிரபல தமிழ் நடிகை மருத்துவமனையில் அனுமதி

சிம்புவுடன் 'குத்து', தனுஷுடன் 'பொல்லாதவன்' உள்ளிட்ட பலதிரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா...

'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்யும் இளையதளபதி பட தயாரிப்பாளர்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ள படங்களில் ஒன்று பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். பாகுபலியை கட்டப்பா கொலை செய்தது ஏன் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதுதிலும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்...

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' புதிய அப்டேட்

சூர்யாவின் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த 'சி3' திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் குறித்து கமல் கருத்து

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே சமூக விழிப்புணர்ச்சியையும், ஒரு குடிமகனாக தனக்குள் எழும் உணர்ச்சியையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். இந்த கருத்துக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பையும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சி கமல் மீது போலீஸ் புகாரும் கொடுத்துள்ள